1 00:00:02,000 --> 00:00:07,000 Downloaded from YTS.MX 2 00:00:08,000 --> 00:00:13,000 Official YIFY movies site: YTS.MX 3 00:00:35,786 --> 00:00:40,207 இன்று, கோவிட்-19-ஐ ஒரு சர்வதேச தொற்றாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. 4 00:00:40,290 --> 00:00:44,127 "வீட்டில் இருங்க, பாதுகாப்பாக இருங்க" செயலாக்க ஆணையை வெளியிடுகிறேன். 5 00:00:44,211 --> 00:00:46,672 ...குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கியிருக்க 6 00:00:46,755 --> 00:00:49,424 அறிவுறுத்தப்படுகிறார்கள். 7 00:00:49,508 --> 00:00:53,262 இன்று மாலையில் இருந்து, நான் ஒரு மிக எளிய கட்டளையை இடுகிறேன். 8 00:00:53,345 --> 00:00:55,264 நீங்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். 9 00:00:57,558 --> 00:01:02,354 மார்ச் 2020. ஒரு உயிர்கொல்லும் வைரஸ் உலகமெங்கும் பரவுகிறது. 10 00:01:02,437 --> 00:01:04,982 முடிந்தால் வீட்டிலேயே இருங்கள் 11 00:01:05,065 --> 00:01:08,819 ஓரே இரவில், நம் வாழ்க்கை நிற்க வேண்டியதாயிற்று. 12 00:01:14,533 --> 00:01:16,201 நாம் நிற்கையில்… 13 00:01:17,536 --> 00:01:22,583 இயற்கை உலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் துவங்குகின்றன. 14 00:01:25,919 --> 00:01:27,546 மிக தூய்மையான காற்று. 15 00:01:29,923 --> 00:01:31,550 மிக தூய்மையான தண்ணீர். 16 00:01:33,135 --> 00:01:38,974 விலங்குகள் பல தசாப்தாங்களாக நாம் பார்த்திராத வழிகளில் செழிக்க தொடங்குகின்றன 17 00:01:41,894 --> 00:01:46,607 ஐந்து கண்டங்களில் பொது முடக்கம் துவக்கத்தில் இருந்தே படம் பிடித்ததில்... 18 00:01:48,692 --> 00:01:52,154 இயற்கையின் அசாதாரணமான மறுமொழியை நாங்கள் பதிவு செய்துள்ளோம். 19 00:02:01,121 --> 00:02:04,833 புதிய வழிகளில் தனது குட்டிகளுடன் தொடர்பு கொள்ளும் மாபெரும் கடல் உயிரினங்கள்... 20 00:02:08,920 --> 00:02:13,675 தனது குட்டிகள் உயிர் பிழைத்திருப்பதற்கான சாத்தியங்களை உருமாற்றிய சிறுத்தைகள்... 21 00:02:14,343 --> 00:02:17,429 அவள் ஒரு தாயாக இருப்பதற்கு இது தான் சிறந்த நேரம். 22 00:02:18,430 --> 00:02:24,019 அழிந்துவரும் பென்குயின்கள் முன்பு எப்போதையும் விட பெருகி வருகின்றன. 23 00:02:26,939 --> 00:02:32,152 வனவிலங்குகளின் உலகிற்குள்ளும் அவற்றின் வாழ்க்கைக்குள்ளும் எட்டிப் பார்த்து 24 00:02:32,778 --> 00:02:37,199 அனைத்தும் எப்படியுள்ளது என்று நாம் தெரிந்துக் கொள்ள இது ஒரு தனி சந்தர்ப்பம். 25 00:02:37,950 --> 00:02:41,578 மாபெரும் விகிதாச்சாரங்களின் ஒரு உலகளாவிய பரிசோதனை. 26 00:02:43,163 --> 00:02:47,459 இது தான் பூமி மாறிய வருடம். 27 00:03:00,222 --> 00:03:04,351 டேவிட் அட்டென்பரோவின் வர்ணனையில் 28 00:03:05,894 --> 00:03:11,483 பொது முடக்கம் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே அமைதியை நாம் கவனித்தோம். 29 00:03:11,567 --> 00:03:12,818 ரேடியோ சிட்டி மியூசிக் ஹால் 30 00:03:14,236 --> 00:03:19,199 உலக போக்குவரத்து இரைச்சல் 70% வரை வீழ்ச்சி அடைந்திருக்கையில், 31 00:03:19,283 --> 00:03:22,452 ஒரு புதிய பாடல் ஒலி கேட்கிறது... 32 00:03:25,581 --> 00:03:26,999 ...பறவையின் பாடல். 33 00:03:31,503 --> 00:03:33,547 சான் ஃபிரான்சிஸ்கோ அமெரிக்கா 34 00:03:33,630 --> 00:03:35,257 மாநகர மக்கள் தொகை 4.7 மில்லியன் 35 00:03:35,340 --> 00:03:37,426 இந்த வெள்ளை கிரீடமுடைய குருவிகள் 36 00:03:37,509 --> 00:03:41,346 அதிசயத்தக்க ஒன்றை செய்து, இந்த அமைதிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றன. 37 00:03:43,640 --> 00:03:46,476 கோல்டன் கேட் பிரிட்ஜின் நிழலில் வாழ்வதால், 38 00:03:46,560 --> 00:03:50,480 அவை பாடுவது கார்களின் சத்தத்தில் மழுங்கடிக்கப்பட்டன. 39 00:03:52,482 --> 00:03:57,362 ஆனால் 1950களுக்கு பிறகு போக்குவரத்து இங்கே மிக குறைவாக இருப்பதால், 40 00:03:58,614 --> 00:04:04,244 ஆய்வாளர்கள் குருவிகளின் இனசேர்க்கைக்கான அழைப்பிலுள்ள புதிய ஒலிகளை கேட்டு வியந்தனர் 41 00:04:06,788 --> 00:04:11,877 பல வருடங்களுக்கு அந்த பறவைகள் மிக சிறப்பாக இனப்பெருக்கம் செய்யும் என நம்பப்படுகிறது. 42 00:04:17,548 --> 00:04:20,552 குறைந்து வருவது இரைச்சல் அளவு மட்டுமில்லை. 43 00:04:22,304 --> 00:04:28,310 உலகெங்கிலும் உள்ள காற்று மாசுபாடு குறையும் வேகமும் அதிர்ச்சியூட்டுகிறது. 44 00:04:30,229 --> 00:04:31,438 ஒரு சில நாட்களிலேயே, 45 00:04:31,522 --> 00:04:36,944 40 வருடங்களாக இல்லாத அளவிற்கு தூய்மையான காற்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காணப்படுகிறது. 46 00:04:39,112 --> 00:04:44,243 சீனா முழுவதும், வளிமண்டலத்தில் உள்ள நச்சு வாயுகளின் அளவுகள் பாதியாக குறைந்துள்ளன. 47 00:04:46,245 --> 00:04:52,125 உலகின் மிக கடுமையான காற்று மாசுபாட்டினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான... 48 00:04:53,585 --> 00:04:56,213 இந்தியாவில் பொதுமுடக்கம் தொடங்கிய 12 நாட்களுக்கு பிறகு... 49 00:04:56,713 --> 00:04:59,216 ஜலந்தர் - இந்தியா மக்கள் தொகை 1 மில்லியன் 50 00:04:59,299 --> 00:05:01,510 ...வியப்பூட்டும் ஒரு காட்சி தெரிகிறது. 51 00:05:01,593 --> 00:05:04,471 நாங்கள் மேஜையில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்த போது, 52 00:05:04,555 --> 00:05:06,014 என் அப்பா அவசரமாக ஓடி வந்தார். 53 00:05:06,098 --> 00:05:07,391 அன்ஷுல் சோப்ரா 54 00:05:07,474 --> 00:05:10,060 "மேலே வாங்க. அந்த மலைகள் தெரிகின்றன." என்று கூறினார். 55 00:05:10,143 --> 00:05:12,521 பயில்முறை புகைப்படக்காரர் அன்ஷுல் 56 00:05:12,604 --> 00:05:15,858 எதற்காக இந்த உற்சாகம் எல்லாம் என்று பார்க்கச் செல்கிறார். 57 00:05:16,817 --> 00:05:19,236 மக்கள் மாடிகளில் நின்றுக் கொண்டு, 58 00:05:19,319 --> 00:05:21,822 "ஆஹா. ஆஹா. மலைகள். மலைகள்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். 59 00:05:21,905 --> 00:05:24,533 நான் சற்று நின்றுவிட்டு, பிறகு பார்த்தேன். 60 00:05:27,327 --> 00:05:30,455 வானம் தெளிவாக இருந்ததால், வாழ்நாளில் முதல் முறையாக, 61 00:05:30,539 --> 00:05:32,124 எங்களால் இமயமலையை பார்க்க முடிகிறது. 62 00:05:33,041 --> 00:05:35,210 200 கிலோமீட்டர் தொலைவில், 63 00:05:35,294 --> 00:05:38,046 பூமியின் மிக உயரமான மலைத்தொடர், 64 00:05:38,130 --> 00:05:41,842 30 வருடங்களாக புகைமூட்டத்தில் மறைந்திருந்தது, 65 00:05:41,925 --> 00:05:43,468 ஆனால் திடீரென இப்போது தெரிகிறது. 66 00:05:44,469 --> 00:05:45,888 என் கண்களை என்னால் நம்ப முடியல. 67 00:05:45,971 --> 00:05:49,725 இத்தனை காலமாக புகை மூட்டத்திற்கு பின்னால், இமயமலை அங்கேயே தான் இருந்திருக்கிறது. 68 00:05:51,935 --> 00:05:56,523 அன்ஷூல் எடுத்த இந்த கணத்தின் புகைப்படம் உலகம் முழுக்க பரவியது. 69 00:05:57,608 --> 00:05:59,276 நம் இயக்கம் நின்ற கணமே, 70 00:05:59,359 --> 00:06:04,865 பூமியால் மீண்டும் சுவாசிக்க முடிந்தது என்பதை இது தெளிவாக காட்டுகிறது. 71 00:06:10,495 --> 00:06:13,832 பொதுமுடக்கம் பல வாரங்களுக்கு நீடிக்கிறது. 72 00:06:13,916 --> 00:06:16,043 4 வாரங்கள் 73 00:06:16,126 --> 00:06:20,172 மற்றும் பயண தடைகள் நம் நடமாட்டத்தை மேலும் கட்டுபடுத்துகின்றன. 74 00:06:21,131 --> 00:06:24,468 நீங்கள் எடுக்கவிருந்த விடுமுறைகளை, ரத்து செய்து விடுங்கள். 75 00:06:24,551 --> 00:06:27,346 பயணியர் எண்ணிக்கை மற்றும் பதிவுகள் குறைந்துவிட்டன. 76 00:06:27,429 --> 00:06:29,556 வான்வழி பயணம் முற்றிலும் குறைந்துவிட்டது. 77 00:06:29,640 --> 00:06:32,726 உலகம் முழுக்க கிட்டத்தட்ட 90% குறைந்துவிட்டது. 78 00:06:33,519 --> 00:06:35,187 ஏப்ரல் 2020, 79 00:06:35,270 --> 00:06:40,526 கடந்த ஆண்டு இதே மாதம் வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளை விட 80 00:06:40,609 --> 00:06:42,778 114 மில்லியன் பேர் குறைவாக வந்துள்ளனர். 81 00:06:44,571 --> 00:06:50,827 ஸ்பெயினில், வருகையாளர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனில் இருந்து பூஜ்ஜியமானது. 82 00:06:53,664 --> 00:06:55,666 ஃப்ளாரிடா - அமெரிக்கா மக்கள் தொகை 22 மில்லியன் 83 00:06:55,749 --> 00:07:00,546 ஃப்ளாரிடாவில், வசந்தகால விடுமுறையின் போது கூட்டம் அலைமோதுகிற கடற்கரைகள்... 84 00:07:01,505 --> 00:07:03,131 விரிச்சோடி காணப்படுகின்றன. 85 00:07:06,385 --> 00:07:11,056 அழிந்துவரும் ஒரு கடற்வாழ் உயிரினத்திற்கு தன் இனத்தை பெருக்கிக் கொள்வதற்கான 86 00:07:11,139 --> 00:07:12,933 வாய்ப்பாக இது இருக்கக் கூடுமா? 87 00:07:21,066 --> 00:07:24,611 ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று வருடங்களில், 88 00:07:24,695 --> 00:07:27,739 பெண் ஆமைகள் தாங்கள் முட்டைகளில் இருந்து குஞ்சாக வெளிவந்த கடற்கரைகளுக்கு 89 00:07:27,823 --> 00:07:29,658 தங்களின் சொந்த முட்டைகளையிட திரும்பும். 90 00:07:32,077 --> 00:07:36,498 உலகம் முழுக்க, ஆமைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக குறைந்து வருகிறது, 91 00:07:36,582 --> 00:07:41,128 ஏனெனில் மக்கள் கூட்டமுள்ள கடற்கரைகளில் முட்டையிட அவை தயக்கம் காட்டியதும் காரணம். 92 00:07:46,091 --> 00:07:47,301 ஆனால் இந்த ஆண்டு... 93 00:07:48,760 --> 00:07:49,970 வித்தியாசமானது. 94 00:07:53,140 --> 00:07:56,518 உள்ளூர் ஆராய்ச்சியாளர்களுடன் பணிபுரியும் எங்களின் கேமராமேன், 95 00:07:56,602 --> 00:07:59,938 அதிர்ஷ்டவசமாக இங்கேயுள்ள ஜூனோ கடற்கரையில்... 96 00:08:01,190 --> 00:08:05,819 உலகின் மிக அடர்த்தியான பெருந்தலை கடலாமை முட்டையிடும் இடங்களில் ஒன்றைபடம்பிடித்தார் 97 00:08:10,866 --> 00:08:12,826 இனப்பெருக்க பருவம் தொடங்கியதும், 98 00:08:14,578 --> 00:08:18,081 இந்த பெண் ஆமை தன் வாழ்க்கையில் முதல் முறையாக 99 00:08:18,916 --> 00:08:21,752 நிம்மதியாக முட்டையிட முடிகிறது. 100 00:08:38,018 --> 00:08:40,020 பின்தொடர்ந்த வாரங்களில், 101 00:08:40,102 --> 00:08:42,397 நூற்றுக்கணக்கான ஆமைகளுக்கும் மேல் அதை செய்தன. 102 00:08:47,694 --> 00:08:50,572 முட்டையிடும் ஆமைகளுக்கு பெரிய பிரச்சினையாக 103 00:08:50,656 --> 00:08:53,659 நீண்ட காலமாக கருதப்பட்டது மனித இடையூறு தான். 104 00:08:56,286 --> 00:09:00,374 ஆனால் அறிவியலாளர்களால் அதன் தாக்கத்தை 105 00:09:00,457 --> 00:09:02,459 துல்லியமாக அளவிட முடிந்தது இதுவே முதல் முறை. 106 00:09:08,006 --> 00:09:11,260 ஒவ்வொரு காலையும், இந்த ஆராய்ச்சியாளர்களின் குழு 107 00:09:11,343 --> 00:09:14,972 முட்டையிடும் இடத்தைச் சென்றடையும் ஆமை வழித்தடங்களை எண்ணினார்கள். 108 00:09:18,350 --> 00:09:20,185 கடந்த பத்து ஆண்டுகளில், 109 00:09:20,269 --> 00:09:23,438 பெருந்தலை ஆமைகள் முட்டையிடுவதன் சராசரி வெற்றி விகிதம் 110 00:09:23,522 --> 00:09:26,650 வெறும் 40 சதவீதத்திற்கு குறைந்தது. 111 00:09:27,401 --> 00:09:31,864 கடற்கரை தங்களுக்கு மட்டுமே என்றானதில், அவை இதற்கு மேல் வெற்றிகரமாக இருந்ததுண்டா? 112 00:09:32,614 --> 00:09:34,783 கடற்கரைகளில் மனிதர்கள் அனுமதிக்கப்படாத போது, 113 00:09:34,867 --> 00:09:38,412 வெற்றி விகிதம் 61% ஆக உயர்ந்தது, நாங்கள் பார்த்ததிலேயே இதுதான் மிக உயர்ந்த விகிதம். 114 00:09:38,495 --> 00:09:39,955 டாக்டர் ஜஸ்டின் பெர்ரால்ட் ஆமை ஆராய்ச்சியாளர் 115 00:09:41,707 --> 00:09:44,376 இது ஒரு வியத்தகு முன்னேற்றம். 116 00:09:51,425 --> 00:09:56,138 ஒவ்வொரு கூடுதலான கூட்டில் இருந்தும் ஏறக்குறைய நூறு குஞ்சுகள் வெளிவரும், 117 00:09:56,221 --> 00:10:00,767 அவை ஒவ்வொன்றுமே இனப்பெருக்கம் செய்யக் கூடிய வளர்ந்த ஆமையாக உருவாக முடியும். 118 00:10:03,145 --> 00:10:06,565 கடற்கரைகள் மூடப்பட்டதால், இந்த விலங்குகள் பல லட்ச ஆண்டுகளாக தாங்கள் 119 00:10:06,648 --> 00:10:09,109 செய்து வந்த ஒன்றை, மனித நடமாட்டம் இருந்த போது செய்ததை விட 120 00:10:09,943 --> 00:10:13,614 தற்போது மிக வெற்றிகரமாகவே அதை செய்ய முடிந்தது. 121 00:10:42,226 --> 00:10:44,478 6,000 கிலோமீட்டர் தொலைவில், 122 00:10:44,561 --> 00:10:46,355 அமெரிக்காவின் மேற்கு கரையில்... 123 00:10:49,900 --> 00:10:54,780 அலைகளின் கீழே நிலவும் ஒரு புதிய அமைதி கடல்வாழ் பெரிய மிருகங்களுக்கு 124 00:10:55,697 --> 00:10:57,824 ஒரு வாய்ப்பை தருகிறது. 125 00:10:59,993 --> 00:11:01,995 தென்கிழக்கு அலாஸ்கா அமெரிக்கா 126 00:11:02,079 --> 00:11:03,580 வருடாந்திர பார்வையாளர்கள் 1.3 மில்லியன் 127 00:11:03,664 --> 00:11:07,334 ஒவ்வொரு ஆண்டும், 10,000 கூன்முதுகு திமிங்கிலங்களுக்கு மேல் 128 00:11:07,417 --> 00:11:08,710 ஹவாயிலிருந்து... 129 00:11:10,796 --> 00:11:14,633 அலாஸ்காவில் உள்ள இந்த விரிகுடாக்களுக்கு இரைத்தேடி வருகின்றன. 130 00:11:23,183 --> 00:11:25,769 வழக்கமாக, வருடத்திற்கு ஒரு மில்லியன் வருகையாளர்களை கொண்டு வரும் 131 00:11:25,853 --> 00:11:29,690 மிகப்பெரிய கப்பல்களுடன் சேர்ந்து அவை இந்த கடல் நீரில் பயணிக்கும். 132 00:11:36,280 --> 00:11:39,366 ஆனால் தற்போது, ஒரு கப்பல் கூட ஓடாத நிலையில்... 133 00:11:40,284 --> 00:11:45,163 25 மடங்கு அதிகமான அமைதி தண்ணீருக்கு அடியில் நிலவுகிறது. 134 00:11:46,832 --> 00:11:51,837 இந்த நிசப்தத்தில், அறிவியலாளர்கள் நீருக்கடியில் பயன்படுத்தும் மைக்கை கொண்டு 135 00:11:51,920 --> 00:11:54,381 ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பதிவு செய்துள்ளனர். 136 00:11:55,132 --> 00:11:58,427 கூன்முதுகுத் திமிங்கிலங்கள் தங்களுக்குள் அடிக்கடி பேசிக் கொள்கின்றன... 137 00:12:00,637 --> 00:12:02,806 புதிய வழிகளிலும் பேசிக் கொள்கின்றனவாம். 138 00:12:04,725 --> 00:12:07,144 திமிங்கிலங்கள் நீண்ட நேரம் தங்களுக்குள் ஒலிகள் எழுப்பிக் கொள்வதை... 139 00:12:07,227 --> 00:12:08,812 கிறிஸ்டீன் கேப்ரியல் திமிங்கில ஆராய்ச்சியாளர் 140 00:12:08,896 --> 00:12:11,315 ...கேட்க உற்சாகமாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருந்தது. 141 00:12:11,982 --> 00:12:14,651 ஒரு திமிங்கிலம் ஒலியெழுப்புகிறது, அதன் பிறகு ஒரு தாயும், கன்றும். 142 00:12:14,735 --> 00:12:16,570 அதாவது, நான் இதற்கு முன்பு அதை கேட்டதே இல்லை. 143 00:12:18,113 --> 00:12:21,074 கூட்ட நெரிசல் உள்ள பாரில் உங்கள் நண்பர்களுடன் பேச முயற்சி செய்வதை 144 00:12:21,158 --> 00:12:22,492 கற்பனை செய்து பாருங்கள். 145 00:12:22,576 --> 00:12:25,162 அங்கே அது கடினம், அதிகம் பேச மாட்டீர்கள், கத்தினால் தான் கேட்கும். 146 00:12:25,245 --> 00:12:26,246 டாக்டர் சூஸி டீர்லிங்க் திமிங்கில ஆராய்ச்சியாளர் 147 00:12:26,330 --> 00:12:28,999 ஆனால் ஒரு அமைதியான காஃபி கடையில் நீங்கள் இருக்கும் போது, 148 00:12:29,082 --> 00:12:30,751 இரைச்சல் இல்லாத அந்த இடத்தில் 149 00:12:30,834 --> 00:12:34,880 நீங்கள் நெடுநேரம், விரிவாக உரையாட முடியும். 150 00:12:38,842 --> 00:12:41,720 ஆனால் இன்னும் ஆச்சரியமான ஒன்று இருக்கிறது. 151 00:12:45,182 --> 00:12:50,270 இப்போது திமிங்கிலங்களால் இன்னும் அதிக தூரத்திற்கு இடையூறு இல்லாமல் பேச முடிகிறது 152 00:12:50,854 --> 00:12:55,067 மற்றும் இது போன்ற தாய் திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகளை தனியே விட்டு செல்கின்றன. 153 00:12:55,901 --> 00:12:58,403 இது ஒரு மிக மிக அரிதான காட்சி. 154 00:13:01,823 --> 00:13:03,825 தனது குட்டி அழைத்தாலும் அது தனக்கு கேட்கும் என்பதால், 155 00:13:03,909 --> 00:13:09,164 தாய் திமிங்கிலத்தால் தற்போது நிம்மதியாக இரைத்தேடிச் செல்ல முடிகிறது. 156 00:13:15,546 --> 00:13:18,841 பாலூட்டும் தாய் முடிந்தளவிற்கு அதிகமாக உணவு உட்கொள்ள வேண்டும், 157 00:13:20,092 --> 00:13:24,096 அதை செய்வதற்கு சிறந்த வழி, மற்ற பெரிய திமிங்கிலங்களுடன் வேட்டையாடுவது. 158 00:13:30,143 --> 00:13:32,271 திமிங்கிலங்கள் தலைகீழாக பாய்ந்து... 159 00:13:34,439 --> 00:13:36,984 குமிழிகளாலான வட்டச்சுவர் ஒன்றை உருவாக்கி... 160 00:13:39,152 --> 00:13:42,030 மீன்களை பெருங்கூட்டமாக ஒன்றுத்திரட்டி நீந்தச் செய்து... 161 00:13:44,825 --> 00:13:47,786 பிறகு ஆயிரங்கணக்கான மீன்களை ஆவலுடன் அப்படியே விழுங்கிவிடும். 162 00:13:53,333 --> 00:13:56,545 இது இயற்கையின் மிகச்சிறந்த அதிசய காட்சிகளில் ஒன்று. 163 00:14:10,017 --> 00:14:12,186 அமைதியான சூழல் தரும் உறுதியினால், 164 00:14:12,269 --> 00:14:17,024 கூன்முதுகு தாய் திமிங்கிலங்கள் இது போல அடிக்கடி ஒன்றாக சேர முடிகின்றன. 165 00:14:18,025 --> 00:14:20,402 இந்த ஆண்டு, இவை கடலில் இடையூறின்றி இருக்கின்றன. 166 00:14:20,485 --> 00:14:24,114 அவை விரும்பிய இடத்தில் விரும்பிய நேரத்தில் தங்களுக்கு வேண்டிய எதையும் செய்கின்றன. 167 00:14:24,781 --> 00:14:26,283 முந்தைய ஆண்டுகளில், 168 00:14:26,366 --> 00:14:30,370 7 சதவிகித குட்டிகள் மட்டுமே வளர்ந்து பெரியவை ஆகின. 169 00:14:31,538 --> 00:14:35,709 ஆனால், இந்தப் பருவத்தில், அதற்கும் மேலானவை உயிர்பிழைக்க நிறைய வாய்ப்புள்ளது. 170 00:14:37,836 --> 00:14:40,964 திமிங்கிலங்களால் தாக்குப்பிடிக்க முடியாத சில கடுமையான ஆண்டுகளுக்கு பின்னர்... 171 00:14:41,048 --> 00:14:42,299 ஜேனட் வில்சன் திமிங்கில ஆராய்ச்சியாளர் 172 00:14:42,382 --> 00:14:45,761 …இந்த பெருந்தொற்று காலம் அவற்றிற்கு அதிகம் தேவைப்பட்ட இடைவேளையை அளித்திருக்கிறது. 173 00:14:49,348 --> 00:14:54,561 நீருக்கடியில் உருவான இரைச்சல் அளவுகளின் மாற்றம் அலாஸ்காவையும் தாண்டியது. 174 00:14:57,064 --> 00:15:02,903 முதல் மூன்று மாத பொது முடக்கதிலேயே, உலக அளவில் கப்பல் போக்குவரத்து 17% குறைந்தது, 175 00:15:03,695 --> 00:15:07,115 அதனால் பெருங்கடல்களில் வாழ்ந்த விலங்குகளின் வாழ்க்கை மேம்பட்டது. 176 00:15:07,199 --> 00:15:10,160 ஹுராக்கி வளைகுடா நியூசிலாந்து 177 00:15:11,453 --> 00:15:13,539 நியூசிலாந்து டால்பின்களால் 178 00:15:13,622 --> 00:15:16,250 தங்களின் தொடர்பு கொள்ளலை மும்மடங்கு தூரம் அதிகரிக்க முடிந்தது. 179 00:15:20,003 --> 00:15:21,338 சாலிஷ் கடல் கனடா 180 00:15:21,421 --> 00:15:26,552 வான்கூவர் ஆராய்ச்சியாளர்கள் கப்பல்சத்தம் நான்கு மடங்கு குறைந்ததை பதிவு செய்தனர். 181 00:15:27,219 --> 00:15:30,264 அதனால் வேட்டை திமிங்கிலங்களால் சோனாரை மிகவும் 182 00:15:30,347 --> 00:15:33,016 மேலும் திறமையாக பயன்படுத்தி வேட்டையாட முடிகிறது. 183 00:15:48,407 --> 00:15:51,201 பெருந்தொற்றுக்குள் விழுந்து மூன்று மாதங்களாகின்றன. 184 00:15:51,285 --> 00:15:52,452 3 மாதங்கள் 185 00:15:52,536 --> 00:15:57,332 அமெரிக்காவில், வேலை செய்வோரில் பாதி பேர் வீட்டில் இருந்தபடியே செய்கின்றனர். 186 00:15:57,416 --> 00:16:01,044 உலகம் முழுக்க, கால்வாசி தொழில்கள் மூடப்பட்டுள்ளன. 187 00:16:03,005 --> 00:16:06,925 பார்கள், உணவகங்கள், காபி கடைகள் மூடியிருக்கின்றன. 188 00:16:07,885 --> 00:16:12,514 அனைத்திற்கும் பிறகு, ரீடெயில் கடைகள் மூடியிருக்கின்றன. 189 00:16:13,599 --> 00:16:17,311 இப்போது கைவிடப்பட்டது போல இருக்கிறது. சுற்றி யாரும் இல்லாதது போல. 190 00:16:18,395 --> 00:16:20,731 உலகின் முக்கிய நகரங்களில், 191 00:16:20,814 --> 00:16:24,985 நடந்து செல்வோர் அளவு 90% மேல் குறைந்துள்ளது. 192 00:16:27,196 --> 00:16:29,531 நகர மையங்கள் ஏறத்தாழ வெறிச்சோடி இருப்பதால்… 193 00:16:29,615 --> 00:16:31,450 விலங்குகள் இப்படியான நகர வாழ்வை 194 00:16:31,533 --> 00:16:35,370 அனுகூலமாகப் பயன்படுத்தும் சிறப்பான புகைப்படங்கள் வெளியாகின. 195 00:16:37,039 --> 00:16:39,041 செயிண்ட் லூசியா தென்னாப்பிரிகா 196 00:16:39,124 --> 00:16:42,169 பெட்ரோல் பங்கிற்கு ஒரு நீர்யானையின் பயணம். 197 00:16:46,173 --> 00:16:47,424 டெல் அவிவ் இஸ்ரேல் 198 00:16:47,508 --> 00:16:50,219 உள்ளூர் பூங்காவில் மகிழ்ந்திருக்கும் குள்ளநரிகள். 199 00:16:53,847 --> 00:16:55,057 சாண்டியாகோ சிலி 200 00:16:55,140 --> 00:16:58,101 ஒரு காட்டுப்பூனைக்கூட நடைப்பாதையில் சுற்றித்திரிகிறது. 201 00:17:06,068 --> 00:17:10,196 ஆனால் ஒரு மிருகம் கைவிடப்பட்ட நகர இடங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட 202 00:17:10,280 --> 00:17:12,657 புத்தி கூர்மையுடன் தன்னை மாற்றிக் கொள்கின்றது. 203 00:17:16,869 --> 00:17:19,205 நாரா ஜப்பான் 204 00:17:19,289 --> 00:17:22,084 வருடாந்திர வருகையாளர்கள் 13 மில்லியன் 205 00:17:25,253 --> 00:17:29,591 குறைந்தபட்சம் 1300 ஆண்டுகளாக இந்த நாரா நகரம், சிகா மான்களின் 206 00:17:29,675 --> 00:17:32,845 புகலிடமாக இருந்து வந்திருக்கிறது. 207 00:17:36,223 --> 00:17:39,059 உணவுக்காக அவை நம்பியிருந்த பெரும்பாலான மலைமுகடுகள் 208 00:17:39,142 --> 00:17:41,812 கட்டிடங்களால் அழிந்துவிட்டன. 209 00:17:41,895 --> 00:17:45,440 ஆனால் இந்தக் கூச்ச சுபாவமுள்ள விலங்குகள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தன. 210 00:17:48,735 --> 00:17:55,367 இந்த மான் நாராகோயிலுக்கு வரும் வருடாந்திர 13 மில்லியன் பார்வையாளர்களிடம் திரும்பியது 211 00:17:56,952 --> 00:17:59,955 மற்றும் கொஞ்சம் மரியாதை காட்டினால்... 212 00:18:02,082 --> 00:18:03,917 இனிமையான வெகுமதிகள் கிடைக்கும் என கண்டுபிடித்தது. 213 00:18:08,463 --> 00:18:13,010 தவிட்டு ரொட்டிகள் அவற்றின் உணவில் ஒரு முக்கிய பங்காகி இருந்தன. 214 00:18:22,978 --> 00:18:25,522 ஆனால் இந்தப் பெருந்தொற்று அதை மாற்றிவிட்டது. 215 00:18:32,154 --> 00:18:35,699 அவற்றின் விருப்பமான உணவு ஒரே இரவில் காணாமல் போய்விட்டது. 216 00:18:40,996 --> 00:18:44,208 மனிதர்கள் இல்லாமல் ரொட்டிகளும் இல்லை. 217 00:18:53,133 --> 00:18:56,678 அந்த மானுக்கு உணவு கிடைக்காமல் போவது குறித்த கவலை நிலவுகிறது. 218 00:18:56,762 --> 00:19:00,974 ஆனால் பழைய தலைமுறை மான்களிடம் ஒரு திட்டமிருப்பதாக தெரிகிறது. 219 00:19:06,104 --> 00:19:10,025 அவை ஒரு குழுவை, கோயில் நிலங்களை விட்டு வெளியே வழிநடத்தின. 220 00:19:10,526 --> 00:19:12,945 தாங்கள் எங்கே செல்கிறோம் என்பதும் அவற்றிற்கு நன்றாகவே தெரிந்திருந்தது. 221 00:19:21,161 --> 00:19:23,789 அவை பிரதான சாலையை நோக்கிச் செல்கின்றன... 222 00:19:26,124 --> 00:19:29,336 நகரத்தின் மையமான கான்கிரீட் காட்டுக்குள்ளே நுழைந்தன. 223 00:19:40,889 --> 00:19:44,643 ஆனால், அவை இந்த விரிவான நகரத்தில் உணவை எங்கே கண்டுபிடிக்கும்? 224 00:19:52,734 --> 00:19:55,153 ஒரு இரண்டரை கிலோமீட்டர் நடைப்பயணத்தின் பின்னர்… 225 00:19:56,989 --> 00:19:58,991 அந்தக் குழு ஓரிடத்தில் நின்றது. 226 00:20:04,454 --> 00:20:09,459 ஆளரவமற்ற அந்தப் பகுதி ஒருகாலத்தில் அவற்றின் மேய்ச்சல் நிலமாக இருந்தது. 227 00:20:10,586 --> 00:20:12,713 நம்பமுடியாத வகையில், முதிய மான்களுக்கு 228 00:20:12,796 --> 00:20:16,592 மேய்ச்சல் நிலமாக இருந்த அந்த இடம் நினைவில் இருந்தது. 229 00:20:23,807 --> 00:20:26,268 அது அவற்றிக்கு வேண்டிய எல்லாவற்றையும் கொடுத்து வந்திருக்கிறது: 230 00:20:26,852 --> 00:20:30,439 புத்தம்புது புற்கள், இலைகள் மற்றும் தாவரங்கள். 231 00:20:35,152 --> 00:20:36,570 அடுத்து வந்த வாரங்களில், 232 00:20:36,653 --> 00:20:41,992 அந்த நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை காட்டிலும் எஞ்சியிருந்த நிலத்தில் மேய்ந்தன 233 00:20:44,286 --> 00:20:48,207 மனிதர்கள் இல்லாததால் மற்றொரு அனுகூலமும் கிடைத்தது. 234 00:20:50,250 --> 00:20:55,589 மான்களை இந்த புதிய உணவு ஆரோக்கியமாக வைத்திருப்பதை மட்டும் அல்லாமல்... 235 00:20:57,674 --> 00:21:01,678 ஆட்கள் குறைந்ததால், மான்களை கொல்லக்கூடிய பிளாஸ்டிக் குப்பைகளும் குறைந்தன என்பதையும் 236 00:21:02,346 --> 00:21:04,056 விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 237 00:21:09,728 --> 00:21:13,273 நம்முடைய இருப்பினால் விலங்குகள் பலனடைவது போலத் தெரிந்தாலும்... 238 00:21:16,109 --> 00:21:19,738 நிறைய விஷயங்களில் நாம் இல்லாமலேயே அவை நன்றாக வாழ்கின்றன. 239 00:21:30,958 --> 00:21:33,085 நான்கு மாத பொது முடக்கத்திற்கு பின்னர் நாம் திரும்பிச் சென்ற இடங்களில்... 240 00:21:33,168 --> 00:21:35,128 புயனஸ் அயர்ஸ், அர்ஜெண்டினா மக்கள்தொகை: 15.2 மில்லியன் 241 00:21:35,212 --> 00:21:39,633 ...நாம் விட்டுசென்ற இடங்கள் காட்டுயிருக்கு புதிய வாய்ப்புகள் அளிக்கின்றன. 242 00:21:46,765 --> 00:21:48,225 அர்ஜெண்டினாவில்... 243 00:21:49,268 --> 00:21:51,562 வழக்கமாகவே அமைதியாக இருக்கும் கேபிபாரா 244 00:21:51,645 --> 00:21:55,524 தங்களின் முன்னாள் ஈரநிலங்களின் மேல் கட்டப்பட்டுள்ள இந்த வசதியான புறநகரின்... 245 00:21:57,317 --> 00:22:00,821 கவனமாக கத்தரிக்கப்பட்ட தோட்டங்களுக்கு செல்கின்றன. 246 00:22:04,032 --> 00:22:08,829 உண்மையில் அவற்றுக்குச் சொந்தமானதை உரிமை கொண்டாடுவதை எதுவும் தடுக்கப்போவதில்லை. 247 00:22:27,472 --> 00:22:28,682 சரி... 248 00:22:30,392 --> 00:22:31,727 ஏறக்குறைய எதுவுமில்லை. 249 00:22:39,234 --> 00:22:44,781 நாம் எவ்வளவு காலம் காணப்படவில்லையோ அவ்வளவு துணிச்சலாக இந்த விலங்குகள் மாறுகின்றன. 250 00:22:46,366 --> 00:22:49,995 ஆப்பிரிக்காவில் சஃபாரி சீசன் ரத்து செய்யப்பட்டுள்ள போது... 251 00:22:50,954 --> 00:22:52,497 முமலங்கா - தென்னாப்பிரிக்கா ஆண்டிற்கு 4.2 மில்லியன் பார்வையாளர்கள் 252 00:22:52,581 --> 00:22:55,417 ...இங்குள்ள ஒரு ஆபத்தான வேட்டை மிருகம் விதிகளை மாற்றி எழுதுகிறது. 253 00:22:58,086 --> 00:23:01,006 இந்த ஆடம்பர லாட்ஜ் வெறுமையாக காணப்படுகிறது. 254 00:23:02,841 --> 00:23:07,554 ஆனால், புதிய விருந்தினர்கள் வரத் தொடங்குவதற்கு அதிக நாட்கள் ஆகாது. 255 00:23:14,811 --> 00:23:18,065 வெர்வெட் குரங்குகள் குளத்தருகில் இடத்தைப் பிடித்துக்கொண்டன. 256 00:23:24,112 --> 00:23:26,615 அதே நேரம் இம்பாலா மற்றும் நயாலா ஆண்டிலோப்கள், 257 00:23:27,407 --> 00:23:29,993 சாலட் பாரில் தங்கள் இடத்தைப் பிடித்தன. 258 00:23:34,039 --> 00:23:36,124 ஆனால் சற்று தூரத்தில்... 259 00:23:38,168 --> 00:23:42,589 முழு வளர்ச்சியுற்ற ஆண் சிறுத்தை ஒன்றும் இருக்கிறது. 260 00:23:49,763 --> 00:23:54,685 பகல்பொழுதில் இந்த இரவுநேர வேட்டையாடி வந்திருப்பது 261 00:23:54,768 --> 00:23:57,062 உண்மையிலேயே ஆச்சரியம்தான். 262 00:23:57,145 --> 00:23:59,898 நம்முடையக் குழுவினருக்கும் அப்படித்தான். 263 00:24:00,524 --> 00:24:02,192 அப்படியே நில்லுங்கள், மக்களே. 264 00:24:41,356 --> 00:24:42,941 ரஸ்ஸெல் மெக்லாக்லின் காட்டுயிர்களை படம்பிடிப்பவர் 265 00:24:43,025 --> 00:24:46,195 எனக்கு திடுக்கிடும் தருணங்கள் ஏற்பட்டுள்ளன ஆனால் இது எல்லாவற்றிலும் பெரியது. 266 00:24:50,699 --> 00:24:52,117 ஆப்பிரிக்கா முழுக்க, 267 00:24:52,201 --> 00:24:56,538 சிறுத்தைகள் மனிதர்களிடம் தங்களுடைய நிலத்தில் 60 சதவிகிதத்தை இழந்துள்ளன, 268 00:24:57,122 --> 00:24:59,875 அது வேட்டையாடுதலை மிகவும் சவாலாக்கிவிட்டது. 269 00:25:02,503 --> 00:25:05,088 ஆனால் விருந்தினர்கள் யாரும் இல்லாத நிலையில், 270 00:25:05,672 --> 00:25:08,425 இந்தச் சிறுத்தை இங்குள்ள வாய்ப்பை தெரிந்துக்கொண்டு, 271 00:25:09,134 --> 00:25:13,180 தன்னுடைய நடத்தையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை செய்துகொண்டது. 272 00:25:17,059 --> 00:25:19,895 அது பகலிலேயே வேட்டையாடத் தொடங்கிவிட்டது. 273 00:25:29,821 --> 00:25:32,157 இதற்கு சில முயற்சிகள் தேவைப்பட்டிருக்கலாம்... 274 00:25:35,244 --> 00:25:36,912 ஆனால் நீண்ட காலம் ஆகவில்லை... 275 00:25:38,455 --> 00:25:40,457 அதனுடைய புதிய வியூகத்திற்கு... 276 00:25:41,041 --> 00:25:42,251 பலன் கிடைத்துவிட்டது. 277 00:25:49,800 --> 00:25:51,593 ஆப்பிரிக்காவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 278 00:25:51,677 --> 00:25:55,597 கடந்த 25 வருடங்களில் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது. 279 00:25:56,557 --> 00:26:02,271 ஆனால் இந்தப் பொதுமுடக்க பஃபேயின் முழு அனுகூலத்தையும் எடுத்துக்கொண்டு, 280 00:26:02,354 --> 00:26:04,356 இந்தச் சிறுத்தை விருத்தியடைகிறது. 281 00:26:05,023 --> 00:26:08,694 இது கிட்டத்தட்ட அதன் தங்குமிடமாகவே ஆகிவிட்டது. அதனுடைய தனி ராஜாங்கம். 282 00:26:24,835 --> 00:26:27,921 பெருந்தொற்று காலம் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. 283 00:26:28,005 --> 00:26:29,965 6 மாதங்கள் 284 00:26:30,048 --> 00:26:35,262 செப்டம்பரில், 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வந்தன, 285 00:26:37,222 --> 00:26:41,393 இது 3 பில்லியன் மக்களின் செயல்பாட்டை வரம்பிற்குள் உட்படுத்தியிருக்கிறது. 286 00:26:42,311 --> 00:26:43,645 பெரிய கூட்டங்கள், 287 00:26:43,729 --> 00:26:49,484 நேரலை விளையாட்டு நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் உட்பட, 288 00:26:49,568 --> 00:26:54,573 ஒரு தடுப்பூசி போன்ற நம்பத்தகுந்த சிகிச்சை கிடைக்கும் வரையில் திரும்ப நடக்க முடியாது. 289 00:26:56,408 --> 00:26:59,161 நாம் நம்முடைய புதிய இயல்பு வாழ்க்கையோடு பொருந்தும்போது, 290 00:26:59,995 --> 00:27:03,207 இயற்கையின் புத்துயிர்ப்பு தொடர்கிறது. 291 00:27:04,917 --> 00:27:06,168 கங்கை இந்தியா 292 00:27:06,251 --> 00:27:08,462 இந்தியாவில், கங்கை நதி 293 00:27:08,545 --> 00:27:12,674 ஆக்சிஜன் அளவில் 80 சதவிகித அதிகரிப்பதைக் கண்டது. 294 00:27:15,177 --> 00:27:16,386 அட்லாண்டிக் கடற்கரை மொராக்கோ 295 00:27:16,470 --> 00:27:18,847 ஆப்பிரிக்க அட்லாண்டிக் கடற்கரையில், 296 00:27:19,348 --> 00:27:25,270 தண்ணீரின் சுத்தமானது, மோசமானதில் இருந்து அருமையானதாக மாறியிருக்கிறது. 297 00:27:29,900 --> 00:27:34,363 நாம் வெளியே நடமாடுவது நீண்ட காலமாக தொடர்ந்து குறைந்திருப்பதால் 298 00:27:34,446 --> 00:27:37,366 அது புதிய தலைமுறை விலங்குகளை பலனடைய செய்திருக்கிறது. 299 00:27:37,449 --> 00:27:38,992 கேப் டவுன் தென்னாப்பிரிக்கா 300 00:27:39,076 --> 00:27:40,077 மக்கள் தொகை 4.7 மில்லியன் 301 00:27:40,160 --> 00:27:42,579 இங்குள்ள தென்னாப்பிரிக்க கடற்கரையில், 302 00:27:42,663 --> 00:27:47,000 சில பெருமைமிகு புதிய பெற்றோர்கள் தங்களுடைய காலைநேர பயணத்தில் இருக்கிறார்கள். 303 00:27:53,549 --> 00:27:56,385 அவைதான் ஆப்பிரிக்க ஜாக்காஸ் பென்குயின்கள். 304 00:28:05,561 --> 00:28:09,022 அவை நமக்கு அருகிலேயே இருப்பிடத்தை அமைத்துக் கொண்டுள்ளன. 305 00:28:26,540 --> 00:28:28,500 இனப்பெருக்க காலத்தின்போது, 306 00:28:28,584 --> 00:28:32,421 ஒவ்வொரு காலையும் அவை மீன்பிடிக்க கடலுக்குச் செல்கின்றன. 307 00:28:39,970 --> 00:28:42,389 அவற்றின் குஞ்சுகள் அதிகமான தேவைகள் உடையவை. 308 00:28:43,765 --> 00:28:48,687 அவை தங்கள் உடலின் 15 சதவிகிதம் அளவுக்கான மீன்களை உண்ண வேண்டும். 309 00:28:51,523 --> 00:28:55,319 அதிர்ஷ்டவசமாக, ஜாக்காஸ் பென்குயின்கள் மிகவும் திறமையான வேட்டையாடிகள்... 310 00:28:56,153 --> 00:28:58,572 அவற்றால் 80 மீட்டர் ஆழம்வரைச் சென்று 311 00:28:59,406 --> 00:29:03,076 ஓடு இருக்கும் மீன்களையும், கூட்டமாகத் திரியும் மீன்களையும் உட்கொள்ள முடியும். 312 00:29:09,333 --> 00:29:13,378 ஆனால் தன் பசித்த குஞ்சுகளுக்கு இரையை கொண்டுவந்து சேர்ப்பதுதான் சவாலானது. 313 00:29:18,675 --> 00:29:22,513 கடந்தாண்டுகளில் இக்கடற்கரைகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தன. 314 00:29:23,639 --> 00:29:26,517 அதனால் பென்குயின்கள் மீன்பிடித்துவிட்டு திரும்பிவரத் தயாராக இருந்த நேரம்… 315 00:29:27,226 --> 00:29:29,478 தங்களுடைய பாதைகள் அடைபட்டிருப்பதைக் கண்டன. 316 00:29:30,812 --> 00:29:34,399 அதில் பல சூரியன் மறையும் நேரம் வரை கரையிலேயே... 317 00:29:36,527 --> 00:29:38,487 மக்கள் கூட்டம் வீடு திரும்பும் வரை காத்திருந்தன. 318 00:29:47,788 --> 00:29:51,834 ஆனால் இந்த வருடம், கடற்கரை ஆளரவமற்றிருக்கிறது. 319 00:29:59,758 --> 00:30:02,427 பென்குயின்கள் தங்கள் பழைய வழக்கத்தைக் கைவிட்டு 320 00:30:02,511 --> 00:30:06,390 இப்போது, தங்களுடைய குஞ்சுகளின் வயிற்றை நிரப்பப் போதுமான மீன்களுடன் 321 00:30:07,349 --> 00:30:10,143 சில மணிநேரங்கள் கடலில் இருந்துவிட்டு திரும்பிவிடுகின்றன. 322 00:30:16,900 --> 00:30:22,531 நிறைய சூரிய ஒளி இருக்கும்போதே, அவற்றால் மீண்டும் கடலுக்குள் செல்ல முடிகிறது. 323 00:30:28,453 --> 00:30:33,584 இந்தக் குஞ்சுகள் இப்போது ஒருநாளில் இருமுறைக்கும் மேல் கூட உணவு உண்கின்றன. 324 00:30:36,420 --> 00:30:39,339 அவை இப்போது ஆரோக்கியமானவை மட்டுமல்ல, வேகமாக வளரக்கூடியவையும் ஆகிவிட்டன, 325 00:30:39,423 --> 00:30:44,970 ஆனால் இதுபோன்ற நிறைய குடும்பங்கள் வெற்றிகரமாக இரட்டையர்களை வளர்த்துள்ளன. 326 00:30:46,930 --> 00:30:49,099 மேலும் நிறைய நல்ல செய்திகளும் உள்ளன. 327 00:30:49,183 --> 00:30:50,684 அடுத்துவந்த சில வாரங்களில், 328 00:30:50,767 --> 00:30:56,148 சில பெற்றோர்கள் வெற்றிகரமாக இரண்டாவது தொகுதி குஞ்சுகளையும் வளர்த்துவிட்டன. 329 00:30:56,690 --> 00:31:00,194 ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஆண்டுகளில் அது இப்போதுதான் முதல்முறையாக நடந்திருக்கிறது. 330 00:31:03,572 --> 00:31:06,909 பல வருடங்களாகவே, பென்குயின்களும் இங்குள்ள மக்களும் ஒருவரோடு ஒருவர் 331 00:31:06,992 --> 00:31:08,911 இணக்கமாகவே வாழ்ந்ததாக நாம் நம்பி வருகிறோம். 332 00:31:12,706 --> 00:31:17,169 ஆனால் உண்மையில், நாம் அவற்றின் வாழ்வை சிக்கலாக்கியிருக்கிறோம். 333 00:31:21,548 --> 00:31:24,426 பென்குயின்களின் எண்ணிக்கை தெற்கு ஆப்பிரிக்காவில் 334 00:31:24,510 --> 00:31:28,597 கடந்த 30 வருடங்களில் 70 சதவிகிதம் குறைந்துவிட்டதால்... 335 00:31:30,599 --> 00:31:33,018 நம்மால் செய்ய முடிந்த அனைத்து உதவிகளும் அவற்றிற்கு தேவை. 336 00:31:42,069 --> 00:31:46,406 நகரத்தில் வாழும் விலங்குகளின் குட்டிகள் மட்டும் செழிக்கவில்லை. 337 00:31:48,075 --> 00:31:51,495 தற்போது, இந்த வருடம் விதிக்கப்பட்ட கட்டுபாடுகளின் விளைவுகள் 338 00:31:51,578 --> 00:31:55,123 உலகின் காடடர்ந்தப் பகுதிகளில் கூட உணரப்படுகின்றன. 339 00:31:55,207 --> 00:31:57,417 மஸாய் மாரா - கென்யா வருடாந்திர பார்வையாளர்கள் 300,000+ 340 00:31:57,501 --> 00:32:01,296 தன் குட்டியை பாதுகாக்கும் பெரிய பூனையின் திறன் உருமாறுதல். 341 00:32:04,508 --> 00:32:05,759 சிறுத்தை. 342 00:32:11,014 --> 00:32:13,851 பூமியில் உள்ளதிலேயே அதிவேகமான பாலூட்டி. 343 00:32:30,200 --> 00:32:31,660 ஆனால் அவற்றிற்கு ஒரு பலவீனம் உண்டு. 344 00:32:31,743 --> 00:32:36,999 அவற்றின் உடல்வாகினாலேயே சிங்கங்கள் மற்றும் கழுதைபுலிகள் போன்ற போட்டி வேட்டையாடிகளின் 345 00:32:38,959 --> 00:32:41,420 கொடூர பலம் இல்லாமல் போய்விட்டது. 346 00:32:46,133 --> 00:32:48,635 அவை சிறுத்தையின் உணவை சந்தோஷமாகத் திருடுகின்றன. 347 00:32:49,386 --> 00:32:51,722 மற்றும் அதன் குட்டியைக் கொல்லவும் தயங்குவதில்லை. 348 00:33:02,733 --> 00:33:05,444 சிறுத்தைகள் பதுங்கியிருக்க முயற்சிக்கின்றன. 349 00:33:08,155 --> 00:33:10,157 ஆனால், இரண்டு குட்டிகளுடன், இந்த தாய், 350 00:33:10,949 --> 00:33:14,995 அவற்றிற்கு உணவளிக்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வேட்டையாட தேவையுள்ளது. 351 00:33:31,720 --> 00:33:33,013 அது வேட்டையாடும் போது, 352 00:33:33,096 --> 00:33:37,059 அதனுடைய ஆறுமாதக் குட்டிகள் உயரமான புல்லுக்குள் மறைந்திருக்கின்றன. 353 00:33:40,145 --> 00:33:45,859 தன்னுடைய வேட்டையை முடித்தவுடனேயே, அதற்கு தடுமாற்றம் ஏற்படுகிறது. 354 00:33:50,781 --> 00:33:53,158 அது நூற்றுக்கணக்கான மீட்டர்கள் குட்டியிடமிருந்து தள்ளியிருக்கிறது, 355 00:33:53,617 --> 00:33:56,328 இறந்த உடலை வெகுதூரம் இழுத்துச்செல்ல வேண்டும். 356 00:33:58,247 --> 00:34:02,459 அது அதை விட்டுவிட்டாலோ, மற்ற விலங்குகளால் அது திருடப்படும் ஆபத்துள்ளது. 357 00:34:05,963 --> 00:34:09,466 அதனுடைய ஒரே தீர்வு தன்னுடைய குட்டிகளை தன்னுடன் சேர்ந்துகொள்வதற்காக... 358 00:34:10,634 --> 00:34:12,386 ...மென்மையான கூக்குரல் எழுப்புவதுதான். 359 00:34:15,179 --> 00:34:16,389 அது கவனமாக இருந்தாக வேண்டும். 360 00:34:17,099 --> 00:34:19,476 அது சத்தமாகவோ அடிக்கடியோ கூக்குரலிட்டால், 361 00:34:19,560 --> 00:34:23,146 பாதுகாப்பற்ற தன் குட்டிகளை நோக்கி அதன் எதிரிகளின் கவனத்தை ஈர்த்துவிடலாம். 362 00:34:26,483 --> 00:34:28,569 இப்படிப்பட்ட தருணத்தில்தான் 363 00:34:28,652 --> 00:34:32,114 அந்தச் சிறுத்தை தன் குரல் கேட்கப்படுவது மிகவும் சிரமமாக இருப்பதாக உணர்ந்தது. 364 00:34:36,284 --> 00:34:38,704 பொது முடக்கத்திற்கு முந்தைய ஆண்டுகளில், 365 00:34:38,786 --> 00:34:42,666 மஸாய் மாராவுக்கு வரும் சுற்றுலாவாசிகளின் விருப்பப் பட்டியலில் 366 00:34:42,748 --> 00:34:44,751 சிறுத்தை வேட்டையை பார்ப்பது முதலாவதாக இருந்தது. 367 00:34:45,585 --> 00:34:49,965 ஆனால், வேட்டையாடிய பிறகு தாயைச் சுற்றி சூழ்ந்த கூட்டத்தினால் பிரச்சினை தோன்றியது. 368 00:34:51,842 --> 00:34:54,094 நிறைய கூச்சல். வாகனங்கள் மேலும் கீழும் இறங்கிவருகின்றன. 369 00:34:54,178 --> 00:34:55,387 சலீம் மண்டெலா சிறுத்தை ஆராய்ச்சியாளர் 370 00:34:55,971 --> 00:34:59,349 ரேடியோவில் வழிகாட்டிகள் பேசுகின்றனர், மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்கின்றனர். 371 00:35:00,893 --> 00:35:02,936 இந்த கூச்சலினால் குட்டிகளை 372 00:35:03,020 --> 00:35:05,397 அழைக்கும் தாய் சிறுத்தைகளின் குரல் மறைந்தன. 373 00:35:06,064 --> 00:35:07,816 இந்தச் சத்தங்கள் எல்லாம் 374 00:35:07,900 --> 00:35:12,321 சிறுத்தைகள் உயிர்பிழைக்க நம்பியிருக்கும் இயற்கைத் தகவல்தொடர்பை மூடிமறைக்கின்றன. 375 00:35:15,699 --> 00:35:20,662 தொடர்ந்து அழைக்க நிர்பந்திக்க படுவதால், அவை ஆபத்தையும் அழைக்கின்றன. 376 00:35:30,589 --> 00:35:32,174 ஆனால் இந்த வருடம்... 377 00:35:32,257 --> 00:35:36,220 இந்தத் தாய் ஏறக்குறைய மனிதத் தொந்தரவே இல்லாத சூழ்நிலையை அனுபவிக்கிறது. 378 00:35:41,517 --> 00:35:45,020 வெறுமையான புல்வெளிப் பிரதேசத்திற்குள் ஒருசில அழைப்புகளிலேயே... 379 00:35:49,066 --> 00:35:50,943 ...தாயின் குரலைக் கேட்டு... 380 00:35:57,282 --> 00:35:59,201 குட்டிகள் அதனுடன் சேர்ந்துக் கொள்கின்றன. 381 00:36:03,664 --> 00:36:06,333 அந்தத் தாய் சில அழைப்புகள் மட்டுமே செய்ததைக் கண்டோம். 382 00:36:06,416 --> 00:36:09,753 ஒன்று அல்லது இருமுறைகளுக்குள் குட்டிகள் உடனடியாக பதிலளித்தன. 383 00:36:12,214 --> 00:36:13,924 சுற்றிலும் மனிதர்கள் இல்லாததால், 384 00:36:14,007 --> 00:36:17,386 சிறுத்தை குட்டிகளால் நன்கு பிழைக்க முடிவதை ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கின்றனர். 385 00:36:19,847 --> 00:36:23,725 கோவிட்டிற்கு முந்தைய காலங்களில், மூன்றில் ஒரு குட்டி மட்டுமே உயிர்பிழைத்தது 386 00:36:23,809 --> 00:36:25,811 ஆனால் தற்போது, மூன்று மாதங்களுக்கு மேல் வயதுடைய 387 00:36:25,894 --> 00:36:28,021 குட்டிகள் நிறைய இருப்பதை நாம் காண்கிறோம், 388 00:36:28,105 --> 00:36:29,815 நிறைய குட்டிகள் உயிர்பிழைத்திருக்க போவதால் 389 00:36:29,898 --> 00:36:33,026 சிறுத்தைகளும் நிறைய இருக்கப் போகின்றன என்று 390 00:36:33,110 --> 00:36:34,778 நமக்கு நம்பிக்கையைத் தருகிறது. 391 00:36:37,739 --> 00:36:41,952 ஆப்பிரிக்காவில் 7000 பெரிய சிறுத்தைகள் மட்டுமே தற்போது இருப்பதால்... 392 00:36:43,954 --> 00:36:45,831 ஒவ்வொரு குட்டியும் விலைமதிப்பற்றது. 393 00:37:05,309 --> 00:37:08,395 இந்த வருடம் நமக்கு தொடர்ந்து சவாலாக இருக்கும் வேளையில்... 394 00:37:08,478 --> 00:37:09,813 விந்தி தேசியப் பூங்கா உகாண்டா 395 00:37:09,897 --> 00:37:11,565 ...மேலும் அதிகமான அழிந்துவரும் விலங்குகள் 396 00:37:11,648 --> 00:37:15,485 தாங்கள் உயிர்பிழைப்பதற்கான உற்சாகத்தை அனுபவித்து வருகின்றன. 397 00:37:20,532 --> 00:37:23,535 2020-ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் 398 00:37:23,619 --> 00:37:24,912 இங்கு இந்த மலைவாழ் கொரில்லாக்கள் 399 00:37:24,995 --> 00:37:28,665 வழக்கத்தைவிட இரு மடங்கு குட்டிகளை ஈன்றன. 400 00:37:34,588 --> 00:37:36,089 இங்கிலாந்தின் தெற்குகரையில்... 401 00:37:36,173 --> 00:37:37,174 டோர்ஸெட் இங்கிலாந்து 402 00:37:37,257 --> 00:37:42,679 ...பத்தாண்டுகளில் காணப்படாத அளவு, முட்களுடைய சிறுமீன்கள் காணப்படுகின்றன. 403 00:37:43,180 --> 00:37:48,602 படகுகளின் நங்கூரங்கள் இல்லாமையால் கடல் புற்கள் மீண்டிருப்பதே இதற்கு காரணம். 404 00:37:54,024 --> 00:37:55,359 லைகிபியா கென்யா 405 00:37:55,442 --> 00:37:58,695 மேலும் கென்யாவில், எந்த காண்டாமிருகமும் அதன் கொம்புகளுக்காக கொல்லப்படாமல் இருப்பது 406 00:37:59,363 --> 00:38:02,699 1999-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவே முதல் முறை. 407 00:38:11,416 --> 00:38:14,086 பொதுமுடக்கம் தொடங்கி முழுமையாக ஒருவருடம் ஆகிறது. 408 00:38:14,169 --> 00:38:15,337 12 மாதங்கள் 409 00:38:15,420 --> 00:38:20,217 இயற்கை உலகம் சௌகரியமாக இருப்பதை நம்மில் பலர் கண்டறிந்த ஒரு வருடம். 410 00:38:20,926 --> 00:38:25,848 உலகம் அசாதாரணமான வழிகளில் மாற்றப்பட்டுள்ள ஒரு வருடம். 411 00:38:29,059 --> 00:38:32,187 வருடாந்திர கார்பன் டையாக்சைடு உமிழ்வின் அளவானது 412 00:38:32,271 --> 00:38:35,023 6 சதவிகிதம் குறைந்துள்ளது, 413 00:38:35,107 --> 00:38:37,568 இதுதான் இதுவரையிலான மிகப்பெரிய குறைவு. 414 00:38:39,486 --> 00:38:43,824 பூமியின் மேற்பரப்பிலும்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காணமுடிகிறது. 415 00:38:44,825 --> 00:38:48,620 பயணம் மற்றும் தொழில்துறை சம்மந்தமான வேலைகள் பாதியாக குறைந்ததால் 416 00:38:48,704 --> 00:38:53,458 பதிவான வரலாற்றிலேயே மிகவும் அமைதியான காலகட்டத்தை காண முடிந்தது. 417 00:38:57,796 --> 00:39:00,716 ஆனால் பொதுமுடக்கம் நிரந்தரமாக நீளப்போவதில்லை. 418 00:39:02,217 --> 00:39:05,637 இயற்கைக்கு இடையூறின்றி அதனுடன் இணைந்து வாழ்வதற்கான வழிகளை கண்டுபிடிக்க 419 00:39:05,721 --> 00:39:09,474 இத்தருணத்தில் இருந்து நாம் எதை தூண்டுதலாக எடுத்துக் கொள்ளலாம்? 420 00:39:14,396 --> 00:39:17,900 இந்தியாவில் சிலர், 421 00:39:17,983 --> 00:39:19,693 அழிவின் விளிம்பில் உள்ள, மிக வலிமையான விலங்குகளுடன் 422 00:39:19,776 --> 00:39:24,156 இசைவுடன் வாழ்வதற்கான வாய்ப்பை இப்போதே பயன்படுத்திக் கொள்கின்றனர். 423 00:39:27,659 --> 00:39:32,164 அசாம் - இந்தியா மக்கள் தொகை 36 மில்லியன் 424 00:39:33,582 --> 00:39:35,626 ஒரு முழு வளர்ச்சியுற்ற ஆசிய யானை 425 00:39:35,709 --> 00:39:40,380 ஒருநாளைக்கு 150 கிலோ உணவை தினமும் உண்ண வேண்டும். 426 00:39:41,590 --> 00:39:45,010 ஆனால் அவற்றின் இயற்கை வாழ்விடங்களில் 5 சதவிகிதம் மட்டுமே எஞ்சியிருக்கிறது, 427 00:39:45,594 --> 00:39:48,972 அவற்றின் பெரும்பாலான வனவசிப்பிடங்கள் விவசாய நிலங்களாக்கப்பட்டுவிட்டன... 428 00:39:49,056 --> 00:39:53,685 அதனால் இங்குள்ள யானைகள் விவசாயிகளின் பயிர்களை நோக்கிப் படையெடுக்கின்றன. 429 00:40:05,989 --> 00:40:10,035 இதன் விளைவாக, விவசாயிகள் தங்கள் நிலங்களைக் காக்க முயற்சிக்கின்றனர். 430 00:40:11,453 --> 00:40:17,376 ஆனால் அவர்கள் சார்ந்துள்ள நெல் அறுவடையில் பாதியை தொடர்ந்து இழக்கிறார்கள். 431 00:40:30,138 --> 00:40:32,057 அவற்றை காட்டுக்குள் துரத்துவதற்கு 432 00:40:32,140 --> 00:40:33,892 இரவு முழுவதும் செலவிட வேண்டியிருக்கும். 433 00:40:33,976 --> 00:40:35,394 ஆனாலும் அவை திரும்ப வந்துவிடும் என்பதால்... 434 00:40:35,477 --> 00:40:36,478 பாஷ்கர் பரா 435 00:40:36,562 --> 00:40:39,606 ...நாங்கள் திரும்ப அதையே செய்ய வேண்டியிருக்கும். 436 00:40:53,745 --> 00:40:57,040 இப்போது விவசாய நிலங்கள் மட்டுமே ஆபத்தில் இல்லை. 437 00:41:00,043 --> 00:41:03,630 கிராமங்களில் உணவுத் தேடிவரும் யானைகளும்கூட 438 00:41:03,714 --> 00:41:06,341 மனிதர்களுடன் மோத வேண்டியிருக்கிறது. 439 00:41:11,054 --> 00:41:12,055 நாடு முழுவதிலும், 440 00:41:12,139 --> 00:41:15,809 400 மனிதர்களும் நூறு யானைகளும் 441 00:41:15,893 --> 00:41:18,896 இந்தப் போராட்டத்தில் கொல்லப்படுகின்றனர். 442 00:41:25,819 --> 00:41:28,864 ஆனால் ஒரு சமூகம் மட்டும் பிரச்சினையைத் தீர்க்க 443 00:41:28,947 --> 00:41:30,657 ஒரு புதிய வழியில் முயற்சி செய்கிறது. 444 00:41:31,241 --> 00:41:34,411 பொதுமுடக்கத்தினால் தங்களுடைய ஊருக்கு திரும்பிய நகரத் தொழிலாளர்களால் 445 00:41:34,995 --> 00:41:37,289 ஒரு உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனம் தொடங்கிய திட்டத்திற்கு 446 00:41:37,372 --> 00:41:41,627 உதவிகரம் நீட்ட முடிந்தது. 447 00:41:43,253 --> 00:41:45,130 காட்டு யானைகளுக்கு பயிரிடுவதற்கு... 448 00:41:45,214 --> 00:41:46,215 மேக்னா ஹஸாரிக்கா பல்லுயிர் பாதுகாவலர் 449 00:41:46,298 --> 00:41:50,010 ...பொதுமுடக்கத்தின் போது ஒரு பெரிய வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. 450 00:41:51,803 --> 00:41:54,890 காட்டின் விளிம்பு பகுதிகளில், யானைகள் உண்பதற்கென்று, 451 00:41:54,973 --> 00:42:00,020 வேகமாக வளரக்கூடிய காட்டரிசி, புற்களை ஒரு நடுநிலை இடத்தை உருவாக்கி நட்டு வைத்தனர். 452 00:42:02,814 --> 00:42:07,402 500க்கும் அதிகமாக இருந்த இந்த மொத்தச் சமூகமும் உதவிக்கு வந்தது. 453 00:42:07,486 --> 00:42:08,529 டியூலு போரா பல்லுயிர் பாதுகாவலர் 454 00:42:09,279 --> 00:42:11,031 ஒரு சில மாதங்களில் 455 00:42:11,114 --> 00:42:17,329 அவர்கள் 400 ஏக்கர்கள் 1.6 சதுர கிலோமீட்டர் இடத்தை மாற்றி அமைத்துள்ளனர். 456 00:42:19,373 --> 00:42:22,459 இப்போது அவர்கள் யானைகளை விரட்டியடிப்பதற்கு பதிலாக 457 00:42:22,543 --> 00:42:25,379 அவற்றை வரவேற்கும் விழாவை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 458 00:42:34,346 --> 00:42:36,598 பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. 459 00:42:38,225 --> 00:42:41,854 ஆனால் இந்த யானைகள் தங்களுக்கென்று வைத்த புற்களை உண்ணுமா... 460 00:42:43,897 --> 00:42:46,650 ...அல்லது அவை விவசாயிகளின் நிலங்களுக்குப் படையெடுக்குமா? 461 00:42:51,530 --> 00:42:53,532 வீட்டிற்கு மக்கள் திரும்பிய போது... 462 00:42:54,950 --> 00:42:58,537 காட்டின் விளிம்பில் ஏதோவொன்று நடக்கத் தொடங்கியது. 463 00:43:06,712 --> 00:43:11,925 ஒன்றன்பின் ஒன்றாக, அவை மரங்களின் மறைவிலிருந்து வெளிவந்தன. 464 00:43:14,928 --> 00:43:16,263 தாய் யானைகள். 465 00:43:17,764 --> 00:43:19,266 குட்டிகள். 466 00:43:19,349 --> 00:43:24,354 ஒரு முழுமையான 26 பசித்த யானைகளைக் கொண்ட பெரிய குடும்பம். 467 00:43:26,690 --> 00:43:28,358 அவை எவ்வளவு தூரம் சுற்றித் திரியும்? 468 00:43:33,739 --> 00:43:36,575 காட்டின் விளிம்பில் நெருக்கமாக இருந்தபடியே... 469 00:43:38,076 --> 00:43:42,915 தங்களுக்கென்று நடப்பட்டிருந்த பயிர்களை விருந்தாக்கிக் கொள்ளத் தீர்மானித்தன. 470 00:43:46,126 --> 00:43:48,795 முன்னதாக அவற்றை விரட்டியடித்து இருக்கிறோம். 471 00:43:48,879 --> 00:43:50,881 ஆனால் இப்போது, விஷயங்கள் மாறிவிட்டன. 472 00:43:50,964 --> 00:43:54,259 இது நன்றாக இருக்கிறது... நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். 473 00:43:59,181 --> 00:44:01,767 அறுவடைக் காலம் நெருங்கிக்கொண்டிருக்கையில்... 474 00:44:01,850 --> 00:44:06,438 அந்த யானைகள் எதுவும் விவசாயிகள் நிலங்களில் சுற்றித்திரியவில்லை 475 00:44:07,064 --> 00:44:08,982 கிராமத்திற்குள்ளும் அவை நுழையவில்லை. 476 00:44:12,486 --> 00:44:14,613 நாம் யானைகளை நேசித்தால் 477 00:44:14,696 --> 00:44:17,574 யானைகளும் நம்மை நேசிக்கும். 478 00:44:21,203 --> 00:44:22,955 தாவரங்களினால் ஆன ஒரு இடைப்பட்ட பகுதியால் 479 00:44:23,038 --> 00:44:25,165 ஒரு நெடுங்கால சர்ச்சைக்கு 480 00:44:25,249 --> 00:44:27,459 நீண்டகாலத் தீர்வு கிடைத்திருக்கிறது. 481 00:44:29,920 --> 00:44:32,005 மற்றும் இதனை பக்கத்து கிராமத்தவர்கள் 482 00:44:32,089 --> 00:44:36,844 தாங்களும் செய்வதற்கு உள்ளூர் பாதுகாப்பு நிறுவனத்துடன் பேசி வருகின்றனர். 483 00:44:50,274 --> 00:44:53,026 கடந்த வருடத்தை திரும்பிப் பார்த்தால்... 484 00:44:53,110 --> 00:44:56,530 அது நம்மில் பலருக்கும் ரொம்பவே கடினமானது தான்... 485 00:44:56,613 --> 00:45:01,201 வனவிலங்கிற்கான எதிர்காலத்தையும், நம்முடைய எதிர்காலத்தையும் பாதுகாக்க... 486 00:45:01,285 --> 00:45:02,911 நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்? 487 00:45:05,622 --> 00:45:09,001 நாம் ஒத்திசைந்து வாழ்வது பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். 488 00:45:10,085 --> 00:45:14,214 வனவிலங்குடன் நம் இடங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதை உணரவேண்டும் 489 00:45:14,882 --> 00:45:16,508 முடக்கம் முடிந்து, 490 00:45:16,592 --> 00:45:19,344 வெளிவருகையில் முன்பு செய்ததையே செய்யலாம் என சாதாரணமாக இருந்துவிடக் கூடாது. 491 00:45:21,263 --> 00:45:25,184 இயற்கையின் எதிர்வினையினுடைய வியக்க வைக்கும் வேகமும் வகையும்... 492 00:45:25,267 --> 00:45:29,021 நம் வாழ்க்கையில் நாம் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலே... 493 00:45:29,104 --> 00:45:33,650 இயற்கை உலகிற்கு பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை நிரூபிக்கிறது. 494 00:45:37,487 --> 00:45:41,158 ஒவ்வொரு கோடையின் போதும் சிறிய பொதுமுடக்கங்கள் இருக்கலாம். 495 00:45:41,241 --> 00:45:44,077 இரவுநேர கடற்கரைகள் மூடப்படலாம். அது பகல்நேரத்தில் இருக்க வேண்டியதில்லை. 496 00:45:44,161 --> 00:45:47,039 மக்களால் செய்யக்கூடிய மிகச்சிறிய மாற்றங்கள் 497 00:45:47,122 --> 00:45:50,417 மனிதர்களும் காடும் வெற்றிகரமாக ஒன்றாக இருக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தலாம். 498 00:45:51,627 --> 00:45:54,546 கப்பல்களை மெதுவாகச் செல்லும்படி நாம் கேட்டுக்கொண்டால், 499 00:45:54,630 --> 00:45:58,342 கப்பல்களை குழுவாக போகச் செய்தால், விளைவுகளை அவை சிறியதாக்க முடியும் 500 00:45:58,425 --> 00:46:01,428 மற்றும் நீரின் ஆழத்தில் ஒலியெல்லையையும் திமிங்கிலங்களையும் பாதுகாக்கலாம். 501 00:46:02,304 --> 00:46:05,057 பூங்கா அதிகாரிகளிடம், சுற்றுலாவாசிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளிடையே 502 00:46:05,140 --> 00:46:10,437 இந்த விலங்குகளின் உயிர்வாழ்க்கையை உத்தரவாதப்படுத்துவதை உறுதிப்படுத்தும் 503 00:46:10,521 --> 00:46:12,981 நல்ல நடத்தைகளை மேம்படுத்தும் நோக்கத்தைப் பரிந்துரைத்துள்ளோம். 504 00:46:14,066 --> 00:46:18,403 பூமி மாறிய வருடமான இந்த அசாதாரணமான வருடம், 505 00:46:18,987 --> 00:46:22,741 காட்டுயிர்கள் செழிக்க நம்மால் உதவ முடியும் என்பதை மட்டுமல்லாமல் 506 00:46:23,534 --> 00:46:25,661 நாம் அவ்வாறு செய்யத் தீர்மானித்தால் 507 00:46:26,245 --> 00:46:30,165 இந்த கிரகத்தின் ஆரோக்கியத்தையும் நம்மால் மாற்றமுடியும் என்பதை காட்டியுள்ளது. 508 00:46:31,375 --> 00:46:33,544 மாசுபாட்டை குறைக்க நம்மால் இயன்ற சிறிய வழிகளிலெல்லாம் 509 00:46:33,627 --> 00:46:37,965 பங்களிக்க இதுதான் சரியான நேரம் என எனக்குத் தெரியும். 510 00:46:38,715 --> 00:46:42,302 இயற்கையிலிருந்து தனித்து இருப்பதற்கு மாறாக… 511 00:46:44,096 --> 00:46:48,725 நம்முடைய வாழ்வு அதனுடன் ஆழமாகவும் 512 00:46:48,809 --> 00:46:51,311 ஆச்சரியமான வழிகளிலும் இணைந்துள்ளது என்பது நாம் கண்டுபிடித்திருக்கிறோம். 513 00:46:53,355 --> 00:46:55,816 நாம் எதிர்காலத்தில் செழிக்க வேண்டுமானால், 514 00:46:55,899 --> 00:46:58,902 பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுடன் 515 00:46:59,736 --> 00:47:02,573 நம் கிரகத்தை பகிர்ந்துக் கொள்வதற்கான வழிகளை கண்டறிய... 516 00:47:04,491 --> 00:47:06,869 இது தான் முக்கிய தருணம். 517 00:48:11,517 --> 00:48:13,519 நரேஷ் குமார் ராமலிங்கம்